x

மார்ச் 13 : புலன் வழி தொடர்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

புலன் வழி தொடர்பு :

காயின்றிப் பழம் இருக்க முடியாது. காயாக இருக்கும் போது சுவை வேறுதான். ஆனால் காய் வேறு, பழம் வேறு அல்ல. காயினுடைய முதிர்ச்சிதான் பழம். எந்த ஞானியாக இருந்தாலும் உடலை எடுத்தவுடனே ஐந்து புலன்கள் தான் இயங்க ஆரம்பிக்கும், மூளை வளர்ச்சி வளரும் வரையிலே அன்னை வயிற்றிலே ஒரு air-conditioned நிலை, சமமான உணர்வு;

குழந்தைக்கு உணர்ச்சி இல்லை. வெளிச்சம் இல்லை, சுவையில்லை, மனம் இல்லை, ஐந்து புலன்களும் இயங்கவில்லை. வெளியே வந்து விழுந்தவுடனே அந்தச் சூழ்நிலைக்கும் இந்தச் சூழ்நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக உடல் முழுவதும் பற்றி எறிவது போன்ற உணர்ச்சி, நாம் air-conditioned அறையிலிருந்து வெளியே வந்தொமேயானால் சில இடங்களில் பளிச்சென்று அடிப்பது போன்ற உணர்வு எற்படுகின்றதல்லவா, இது போன்றே பிறந்த குழந்தை உணர்வைப் பெறுகின்றது; வீர், வீரென்று கத்துகின்றது.

அதன்பிறகு சிறிது நேரத்திலே சுவைக்குச் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கின்றார்கள். ஏதோ வெளிச்சம் தெரிகின்றது, பார்க்கின்றது; ஏதோ பேசுகின்றார்கள் கேட்கின்றது. இப்படி ஒவ்வொன்றாகப் புலன்கள் செயல்பட ஆரம்பிக்கின்ற பொழுது முதலில் ஞானியாக இருந்தாலும் அவர்களுக்கும் புலன் வழிதான் உலகத் தொடர்பு ஏற்படுகின்றது. அதன் பிறகு தான் உள்ளொளியாக உள்ள அறிவு பிரகாசம் அடைகின்றது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும்; இது உலக

சமுதாய சங்க நோக்கம்” – மகரிஷி.

“வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ

வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்;

பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து

பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்

ஒழுக்க உணர்வொடு நீதி இன்பம் நேர்மை

உயர்வு எனும் சொற்களுக்கு அருத்தம் காணும்

இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண

ஏற்றவழி குழந்தைகளை பண்படுத்தல்”.

“உள்ளொளியாக உள்ள அறிவு பிரகாசம் அடைய ஏற்ற வழி குழந்தைகளை

பண்படுத்தல்”.

“குழந்தைகளைக் கொண்டுலகைச் சீர்திருத்தக்

கொடுமையின்றி கருத்து செயல் இரண்டும் வாழ்வில்

இழைந்துயரும். படிப்படியாய் உலகம் உய்யும்.

இது உலக சமுதாய சங்க நோக்கம்”

பெற்றோர்தவம் பிள்ளைகள் நலம்:


“பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து

பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்ஆகும்

பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்

பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்றவேண்டும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 14 : அடிப்படைத் தேவைகள்

PREV      :   மார்ச் 12 : சிந்தனையின் சிறப்பு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!