வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
சிந்தனையின் சிறப்பு :
“நம் வாழ்க்கையில் அவ்வப்போது நாம் எதைச் செய்வது என்ற ஒரு சிக்கல் வரலாம்; அல்லது பெருமளவிலான ஒரு மகிழ்ச்சியேகூட வரலாம். அந்தச் சிக்கலிலே அழுந்திவிடக் கூடாது, அல்லது அந்த மகிழ்ச்சியிலே அழுந்திவிடக் கூடாது. இந்தச் சிக்களிலேயிருந்து விடுபட வேண்டிய வழி என்ன என்று நினைத்தாலே போதும். சிக்கலிலே தவித்துக் கொண்டிருக்கக் கூடிய மனம் முனையில் இருக்கிறது.
அந்த மனத்தின் அடியிலே இறைவன் இருக்கின்றான். அவன் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்குத் தயாராக இருகின்றான். அவன் பக்கம் திரும்புவதற்கு வழி காண வேண்டும் என்று சொல்கின்றேன்.சிந்திக்கின்றவர்கள் அதை காணுகின்றார்கள். சிந்தனைக்கு என்று திரும்பினாலே போதும், மற்றதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.
அதைத்தான் வள்ளுவர் கூட, தனது குறல் ஒன்றில் ஒரு மனிதன் முயற்சி எடுத்தால் இறைவன் அவனை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கின்றான் எனக் குறிப்புத் தந்துள்ளார். அது உண்மை தான். இந்த உண்மையை நேரடியாக, அனுபவபூர்வமாகப் பல இடங்களில் நான் உணர்ந்து இருக்கிறேன்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பண்பு :
“சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு”.
“பிறஉயிர் வருத்திப் பிழைப்பவன் அரக்கன்.
பெரியோர் சொற்படி நடப்பவன் பக்தன்.
அறவழி யொழுகி அகத்தே தெய்வம்
அறிந்தோன் தேவன். அர்த்தமே பெயர்கள்”.
குரு வணக்கம் :
“அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : மார்ச் 13 : புலன் வழி தொடர்பு
PREV : மார்ச் 11 : உண்மையான துறவு யாது?