x

மார்ச் 01 : உலக சமுதாய சேவா சங்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


உலக சமுதாய சேவா சங்கம் :

நல்வாழ்வுக்கு வழிகான வேண்டுமெனில் வாழ்வின் நலக்கேட்டுக்கு காரணங்களை முதலில் அறியவேண்டும். பழக்கத்தால் செயலும், கருத்தும் உருவாகி அவற்றுக்கு அடிமையாகி வாழும் மக்களுக்கு விழிப்பூட்டி நல்வழிக்குத் திருப்புவது ஒரு சில நாளில், ஒரு சில மனிதரால் முடிக்கக்கூடிய செயலன்று. ஒரு மனிதன், மக்கள் வாழ்வின் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். அது சரியானது தானா என்று நேர்மையில் சிந்தித்து முடிவெடுக்க, விளக்க அறிவு பெற்றவர்கள் உலகில் பெருக வேண்டும்.

பல துறைகளிலும் பல நாட்டிலும் வாழும் மக்களுடைய அறிவு மயக்க நிலையிலிருந்து விடுபட்டு விளக்க நிலை பெறத்தக்க சூழ்நிலையும் வாய்ப்பும் பெருக வேண்டும். செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் பலரிடம் இன்று உலக நல நோக்கம் மிகுந்து வருகின்றது. அவர்களுடைய ஒத்துழைப்பால் ஓருலகப் பண்பாட்டு அரங்கு நிறுவி அதன் மூலம் திட்டமிட்ட முறையில் மக்கள் பண்பாட்டை உயர்த்த வேண்டும்.

விஞ்ஞான அறிவு பெருகியுள்ள இக்காலத்தில் இளைஞர்களுடைய உள்ளத்தைத் தொட்டு, ஊக்கி நலம் பெருக்கும் நிறுவனம் செயல்புரியவேண்டும். ஆம், இதனை யார் தொடங்குவது? எப்படி மக்களை மயக்க நிலையிலிருந்து விளக்க நிலை வாழ்வுக்கு மாற்றுவது? மக்கள் நலம் பேசிப் பேசி மாண்டவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

சீரிய திட்டங்களும், அவற்றால் விளைந்த பயன்களும் எடுத்துக்காட்ட முடியவில்லையே ! மீண்டும் இச்சோர்வு மனப்பான்மையில் வினாக்கள் எழுகின்றன. “உலக சமுதாய சேவா சங்கம்” என்னும் நிறுவனமே தக்கபதிலாக இயங்குகின்றது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

“ஞானம் பெற தவம் வேண்டும்;

தவத்தைப் பெற குரு வேண்டும்”.

“அவனில் அணு, அணுவில் அவன்,

உன்னில் எல்லாம், நீ அறி உன்னை”.

குண்டலினி தீட்சை :

“இனி இந்தச் சங்கடங்கள் எவர்க்கும் வேண்டாம்

எண்ணத்தின் ஓர்மைக்கு ஏற்றதான

தனிச்சிறப்பாம் குண்டலினி தீட்சை உண்டு

தகுதியுளோர் விருப்பமுளோர் அனைவர்கட்கும்

கனிவுடனே கைவிரலால் நெற்றி தொட்டு

கனல் மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தும்

புனிதமுறையைப் பரப்பஉளம் உவந்தும்


பொறுப் பேற்றும் இருக்கின்றேன் தொடர்பு கொள்வீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 02 : தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி

PREV      :   பிப்ரவரி 29 : ஆக்கினை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!