வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
ஞானம் – பக்தி – மாயை – முக்தி :
ஒரு குழந்தைக்குத் தகப்பன் யார்? என்ற உண்மையைப் பொதுவாகத் தாயார் அறிந்துள்ள நிலையைப் போன்று, மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியாது.இது போன்று ஒரு தத்துவத்தைச் சந்தேகமற, மாறமுடியாத, மாற்ற முடியாத வகையில் அறிந்து கொண்ட திட நிலை ஞானம் எனப்படும்.
வளர்ப்போர் சொல்லிக் கொடுத்ததைத் திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளியைப் போன்று, தன் தாயார் சுட்டிக் காட்டிய ஒருவன் தான் தனது தகப்பன் என்று உறுதியாகச் சொல்லும் மகனின் மனோ நிலையோர்களால் எழுதப்பட்டுள்ள கருத்துக்களே சரியென நம்பி உறுதி கொண்டிருக்கும் நிலையும் இம்மாதிரியே.
கற்பனை வேகத்தால் இயற்கையை மறந்து, சமூகத்தின் அமைப்பையும், மக்களின் எண்ணம் செயல்களால் விளைந்து வரும் விளையப் போகும் நிகழ்ச்சிகளையும் மறந்து, உடலளவின் தேவைகளையும் அறிவுக்கு அந்தச் சமயப் பொருத்தத்தையும் ஞாபகத்தில் கொண்டு, புலனறிவின் எல்லையிலேயே மட்டும் விரிந்து, மயக்க நிலையில் எண்ணிச் செயலாற்றுவது மாயை எனப்படுகிறது.
எள்ளுக்குள் எண்ணெயைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை அறிவால் அறிந்து, வாழ்வில் அமைதி பெறுவதே, அறிவில் தெளிவு பெறுவதே முக்தி எனப்படும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : பிப்ரவரி 15 : வெற்றிபெற வழி
PREV : பிப்ரவரி 13 : அன்புரைகள்
நாளொரு நற்சிந்தனை: