வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
குடும்பக்கலை:
யோக முறையிலே எளிய முறைக் குண்டலினி யோகம் என்ற ஒன்று முக்கியமானது. அதன் பிறகு உடற்பயிற்சி, அதற்கு மேலாக அகத்தாய்வு, அகத்தாய்விலே எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான் யார் என்று வினா எழுப்பி விடை காணுதல் என்ற அளவிலே வருகிறபோது இந்த உடலெல்லாம் தெளிந்தபோது மனமும் தூயதாக தெளிவாக இருக்கிறது.
இருட்டிலே இருக்கின்றபோது அங்கு நல்ல வெளிச்சம் வந்தால் எப்படியிருக்கும்? மேல் தளத்திலிருந்து படியிலே இறங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். விளக்கு இல்லை, சில சமயம் படி இருப்பதே தெரியவில்லை என்றால் என்னவாகும்? ஆனால் படியிருக்கிறது என்று தெரிந்து விளக்கும் இருந்தால் எப்படியிருக்கும்? அதே போல் வாழ்க்கையிலே தெரிந்து வாழக்கூடியதும், தெரிந்ததை நடத்தி, திருத்தி நாம் உறுதி எடுத்துக் கொண்டு அந்த முறையிலே வாழ்வதற்கும் ஏற்றதோர் பயிற்சி தான் மனவளக்கலை.
அதற்கு மேலாக உடலை நன்கு உறுதியாக வைத்துக் கொண்டு, ஆன்மாவை வளர்த்துக் கொள்வதற்குப் பெருந்துணை புரியும் கலை தான் காயகல்பக் கலை. அதை ஒழுங்காகச் செய்து வந்தால் மனிதன் எந்த நிலைக்கு உயர வேண்டுமோ அந்நிலைக்கு உயரலாம். குண்டலினி யோகம் செய்வதற்கு உயிராற்றல் போதிய அளவு வேண்டும்.
அந்த உயிராற்றலுக்கு வித்து ஆற்றலும் வேண்டும். இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொடுக்கக்கூடியது காயகல்பம். காயகல்பம் குண்டலினி யோகத்திற்கு உதவியாக இருக்கிறது. குண்டலினி யோகம் காயகல்பத்திற்கு உதவியாக இருக்கிறது. ஆகவே இரண்டு வழியாலும் நாம் உடலையும், மனதையும் இணைத்து முன்னேறப் பயிற்சி செய்கிறோம். இது குடும்பங்களுக்கெல்லாம் மிக்க அவசியம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது தன்னை
அறிந்து முடிக்கும் வரையில் அமைதி பெறாது”.
தொட்டுக் காட்டல்:
“குருவினது விரல்பட்ட உடனே ஆங்கோர்
குறுகுறுப்பும் சிறு உணர்வும் அறிவிற்கெட்டும்.
ஒருமையுடன் உற்றுற்று உணர்ந்து வந்தால்
உள்நாட்டமே உனக்குப் பழக்கமாகும்;
பெருகிவரும் பேரின்ப எல்லை கண்டு
பிறப்பிறப்பு எல்லைக்கு அப்பால்உள்ள
நிருவிகற்ப நிலைகண்டால், எங்கும் என்றும்
நீயனைத்துமாகி நிற்கும் தன்மை காண்பாய்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : பிப்ரவரி 08 : அருள்தொண்டு
PREV : பிப்ரவரி 06 : என் வீடு