வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
திறமை உயர்வு :
ஏதோ ஒரு வகையிலோ, சில வகையிலோ, திறமைசாலியாக நீ இருக்கலாம் அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். உன் திறமைக்கு கடந்த கால மனித இனத் தொடரும் இக்கால சமுதாயத் தொடரும் ஆதாரம் என்பதை மறந்துவிடாதே. இந்த உணர்வு உன் திறமைக்கு வீழ்ச்சி ஏற்படாது பாதுகாப்பளிக்கும். கடமையிலே உன்னை உயர்த்தும், உனது திறமையை மேலும் மேலும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு துறையிலும் நீ அடைந்துள்ள உயர்வைவிட அதிகமான உயர்வை அடைந்துள்ளோர் பலர் இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடாதே.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது உன்னைவிட திறமைசாலிகளைப் பாராட்டுவதும் உன்போன்ற திறமையில் முன்னேற்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களை உற்சாகப்படுத்துவதும் உன் திறமைக்கோர் சிறப்பளிக்கும் சாதனமாகும்.
சுயநல நோக்கத்தோடு பிறரைப் புகழ்வது கயமைச் செயல் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
(…சொல்லுகிறேன் எழுதுகிறேன் துயர்களைய தூய்மைபெற நலம் காண்பீரே)
நாட்டம் :
“எந்தஎந்தக் காலத்தோ வாழ்ந்திருந்த இறையறிஞர் சிந்தித்தார்கள்
இயற்கையாய் அன்றுவரை வளர்ந்த பண்பாடொப்ப மக்களுக்கு
அந்தஅந்தக் காலத்துத் தேவை சூழ்நிலையறிவுக் கிசைந்தவாறு
ஏற்றபடி வாழ்க்கைமுறை வகுத்தார்கள் சொன்னார்கள் கருணைகொண்டு;
இந்த விந்தை மிகுகாலம் விஞ்ஞான அறிவுக்கு எல்லாம் ஒவ்வா
என்பதனால் இக்காலநிலைக் கேற்ப வாழ்க்கைமுறை விளக்குகின்றேன்;
சொந்த சிந்தனையொட்டி வாழ்வாராய்ந் தவ்வப்போ அன்பர்கட்குச்
சொல்லுகிறேன் எழுதுகிறேன் துயர்களைய தூய்மைபெற நலம் காண்பீரே”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : நவம்பர் 08 : முயற்சியளவே ஞான விளைவு
PREV : நவம்பர் 06 : கூர்மையும், நேர்மையும்