வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
தொடரும் பதிவுகள் :
பிறந்தபோது நாம் ஒன்றுமே கொண்டு வரவில்லை, வாழ்ந்து கொண்டிருக்கின்றபோதும், பல கோடி ஆண்டுகள் ஆண்டு கொண்டிருந்த போதிலும் கூட, குடல் ஜீரணம் ஆகும் அளவுக்கு மேல் யாருமே உணவை உண்ண முடியாது. தான் சுமக்கும் அளவுக்கு மேலே உடையைத் தூக்க முடியாது. இதைத்தான் சங்க காலப்புலவர் ஒருவர் “உண்பது நாழி, உடுப்பது இரண்டே” என்று கூறியுள்ளார். நின்றால் கால் அளவு, படுத்தால் ஆறு அடி. ஒரு அடி இதற்கு மேல் இடத்தை பயன்படுத்திக் கொள்ள இயலாது. எல்லாமே எல்லைகட்டி இருக்கிறது.
போகும் போது ஒன்றுமே கொண்டு போவது இல்லை. என்றாலும் தொடர்ந்து என்ன வருகிறது என்று பார்க்கும்போது தான் அவன் ஆக்கிய செயல்கள், அவன் அறிந்த அறிவு, எல்லாம் வினையின் பதிவாக, அறிவைப் பரம்பொருளிடத்திலே நெருங்கச் செய்யும் ஒரு பாதையாக, ஒரு வெற்றியாக அமைந்து விடுகின்றது. ஆகவே அந்தப் பெருஞ்ஜோதியை நாடிய நாட்டம் எல்லாம், தனிப் பெரும் கருணையை நாடி உலகுக்கு, உயிருக்கு செய்த சேவையையும், அறநெறியும் இறை வணக்கமும் இந்த இரண்டிலே ஏற்பட்ட பதிவுதான் மனிதனைத் தொடர்ந்து போகுமே தவிர வேறு ஒன்றும் தொடர்வது இல்லை.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
எண்ணிப்பார்:-
“நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக்கொள்வீர் :
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : டிசம்பர் 27 : யோகப் பயிற்சி
PREV : டிசம்பர் 25 : வாழ்க்கை நெறி