x

டிசம்பர் 24 : தியாக உணர்வு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


தியாக உணர்வு:

எல்லோரும் என்னை அருட்தந்தை என்று அழைக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய திருமணத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இன்று அகக்காட்சியாக பார்க்கிறேன்.நீங்கள் சாதாரணமாகப் பெண்மையை புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. உள்ளதைப் பாராட்டினாலே போதும். சாப்பாடு செய்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா? நாக்கு வராது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும். இனிமேல் காலை முதல் மாலை வரை யார் நன்மை செய்தாலும் நன்றி பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பண்பாட்டின் உயர்வு. இனிமேல் இந்த பண்பாடு எல்லா இடத்திலும் வர வேண்டும்.

உலகத்திலேயே நட்பு மிக மிகச் சிறந்தது; பயனுடையது; அதிலே கணவன் மனைவி நட்பைப் பற்றி சாதாரணமாகச் சொல்ல முடியாது. அத்தகைய நட்பு எந்தவிகிதத்திலும் மேலானதாகவும், மேன்மையுறவும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இரண்டு பேருடைய வாழ்க்கையும், தூய்மையானதாகவும் மேன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். அப்போது அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த உயர்வான நன்மையைக் கருதி முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் தியாக உணர்வுடன் வாழ்கிறீர்கள். அந்த உணர்வையே நினைவில் வைத்துக் கொண்டு சிறு சிறு குற்றம் குறைகள் இருந்தால் அவைகளை எல்லாம் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அனைவரையும் இறைநிலையில் மனதை நிறுத்தி வாழ்த்துகின்றேன்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

“பெண்களது பெரும் மதிப்பை உணர்ந்தே உள்ளேன்

பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்

பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்ன

பெருமை இதைவிட எடுத்துக் கூறுவதற்கு”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  டிசம்பர் 25 : வாழ்க்கை நெறி


PREV      :  டிசம்பர் 23 : பெருந்தகை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!