x

டிசம்பர் 15 : தெய்வீக உறவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


தெய்வீக உறவு :

குழந்தைப்பேறு உண்டாவதற்கு முன்னதாகவே கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை நமது பண்பாட்டில் நாம் வளர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் பிணக்கு (Conflict Thoughts) எழாது உள்ள குடும்பத்தில் தான் குழந்தைகள் நன்றாக இருக்கும். அங்கு பிணக்கு இருக்குமேயானால் அடிப்படை சுதந்திரத்தையே அடக்குமுறையால் தடுக்கும் போக்கு, அதில் உள்ள போராட்டம் குழந்தைகளிடம் பாதிக்கும்; மனம், உடல் நலம் கெட்டதாகத் தான் அமையும்.

இதை மிகவும் முக்கியமாக காண்கின்ற போது, கணவனும் ஒத்துழைக்க வேண்டும், மனைவியும் ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதற்காக வந்தாகிவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. இனி வாழ்ந்து தான் ஆக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவித்தான் ஆக வேண்டும் என்ற அளவிலே வந்துவிட வேண்டும்.

அங்கு விட்டுக் கொடுப்பதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் ஒருவிதமான பிடியை பிடித்துக் கொண்டு, என் கருத்துத்தான் உயர்ந்தது என்று வைத்துக் கொண்டால் பிணக்குதான் வரும். இதெல்லாம் சரி செய்வதற்கு அகத்தவம் என்ற முறையிலே ஒரு தியான முறையை நல்ல முறையில் செய்து வந்தார்கள் என்றால் மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்து சரி செய்து கொள்ளலாம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

வாழ்த்த மனம் நிறையும்:-

“மனைவியவள் தனைமதிக்க வில்லையென்ற குறையால்

மனம்வருத்தும் கணவருக்கும் மணந்தவர் பொறுப்பாய்

எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்

இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்;

நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு

நிறை மனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்,

உனைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்

உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்.”

அகத்தவம் பெற்றார் குழந்தைகள் :

“திருமணத்தின் முன்னரே அகத்தவத்தைத்

தொடங்கியவர் குழந்தைகளைப் பெற்றபோதும்

கருவினிலே அமைந்திட்ட தவத்தின் வித்து

களங்கத்தைப் போக்குவதில் திருப்பங்கொள்ளும்;

பெருநெறியாம் ஆன்மிக அறிவில் வாழும்

பெற்றோர்க்குப் பின்னர் வரும்குழந்தை எல்லாம்


திருநிலையாய் மெய்ப்பொருளை நாடிச் செல்லும்

தெய்வ உணர்வைப் பெறுவர், களங்கம் போகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : டிசம்பர் 16 : ஆறாவது அறிவு

PREV      :    டிசம்பர் 14 : தெய்வம் படும் பாடு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!