x

டிசம்பர் 10 : மனிதவளக் கம்ப்யூட்டர்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மனிதவளக் கம்ப்யூட்டர் :

இறைநிலையினது நெடும் பயணத் திருவிளையாடல்கள் அனைத்தும் முழுமையாக அலை வடிவில் சுருக்கி வைத்துள்ள கருவூலம் தான் உயிரினங்களின் உடலின் மையத்தில் அமைந்துள்ள கருமையம்.ஒரு பெரிய ஆலமரம் அதன் சிறு வித்தில் அலை வடிவில் சுருங்கியுள்ளது போல, இயற்கையின் பரிணாமச் சரித்திரமானது வான்காந்த அலையில் பதிவாகி, மேலும் மனிதனுடைய சீவகாந்தக் கருமையத்தில் சுருங்கி இருப்பதாக உள்ளது.

இந்தக் காலத்தின் விஞ்ஞானப் பேரறிஞர்கள் கண்டுபிடித்து, வழக்கில் வந்துள்ள கம்ப்யூட்டர் கருவியைப் போல, இறை ஆற்றலால் வடிவமைக்கப்பட்டது கருமையம் எனும் Organic Computer காந்தமையம். இயற்கை வளச் சரித்திரத் திரட்டான மனிதவளக் கம்ப்யூட்டர் என்னும் கருமையம் காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு கண்ணாடி ஆகும்.

இத்தகைய இயற்கைச் சுரங்கத்தைத் தன்னகத்தே அடக்கம் பெற்றுள்ள பாக்யசாலியே மனிதன் என்ற திருஉருவம்.இந்தத் தெய்வீக நிதியை மதிப்போடும் தூய்மை கெடாமலும் காத்து வரவேண்டியது ஆறாவது அறிவின் நிலையில் வாழும் மனிதனுடைய கடமையாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

அறவழி:

“வாதங்கள் வேண்டாம் வாழ்வாங்கு வாழ்ந்த முன்னோர்கள்

வேதங்கள் விரித்துள விளக்கத்தொகுப்புகளனைத்தும்

ஆதங்கம் வறுமை அறியாமை போக்கி மனிதரெல்லாம்

பேதங்கள் அற்றுப் பிழையற வாழும் அறவழியே.”

அறிவையறியக் கருதவம் அவசியம்:-

“தன் உடலின் பரிணாம அமைப்பு, மேன்மை

தத்துவமாம் அறிவினது இயல் பியக்கம்

பின் விளைவும் பேருலகில் ஜீவகொடி

பிறப்பு இறப்பு நடுவாக அனுபவிக்கும்

இன்ப துன்பம், இவைகள் எல்லாம் வயது வந்தோர்

எல்லோரும் அறிந்தறிவால் ஒன்றுபட்டு,

நன்முறையில் வாழ்க்கையிலே அமைதிகானும்

நினைவு உயர்வு கருதவத்தால் ஆகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      :  டிசம்பர் 11 : மறைபொருட்களை உணரும் நிலை

PREV      : டிசம்பர் 09 : மதிப்புமிக்க மனித இனம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!