x

ஜூன் 16 : உண்மை நிகழ்ச்சிகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


உண்மை நிகழ்ச்சிகள் :

“ஒவ்வொருவரும் இவ்வுலகமீது பிறக்கிறோம். மனித இனம் வாழ்ந்து கண்ட அனுபவம், வாழும் மக்களின் கூட்டுறவு, இவைகளின் துணையும் பயனையும் கொண்டு வாழ்கிறோம் இன்ப துன்பம் அடைகிறோம் பின்னர் இறந்து விடுகிறோம்.

இந்த நியதி எல்லோருக்கும் பொது. இந்த உண்மையை மறக்காது விழிப்புடன் இருக்கும் அறிவின் பண்பாட்டுடன், அறிவையும் உடலையும் பண்படுத்தி உலக வாழ்க்கையைச் சிறந்த முறையில் அனுபவிப்பதற்காக, இயற்கைக்குப் பொருத்தமான வாழ்க்கை முறையை வகுத்துப் பூரண அமைதி பெற முயற்சி செய்வோம்.

மனிதனின் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்து, பிறப்பு இறப்பு இடையே அறிவியக்க காலத்தில் மட்டும் ஏற்படும் இன்ப துன்ப தோற்றம், மாற்றம், என்ற மாறுபாடுகளையும் மனதில் கொண்டு, அமைதியாக வாழத் திட்டங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்துகிறோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

மரணத்தை மறவாதே :

“இறப்பதற்கே பிறக்கின்றோம் எனினும் அந்நாள்

எண்ணத்திற்கெட்டு மட்டும் இந்த உண்மை

மறக்காமல் மற்றவர்க்குத் தீங்கு இன்றி

மண்மீது உழைத்துண்டு அன்பாய் வாழ்வோம்.”

முக்கால உணர்வு :

“முற்கால வாழ்க்கையில் கண்ட அனுபவம்,

இக்காலத்தேவை நிகழ்ச்சிகள், சூழ்நிலை,

பிற்கால விளைவுகளை யூகித்துக் கடமைசெய்,

முக்காலம் கண்டமுனிவன் நீயே அங்கே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 17 : சிந்தனை

PREV      :   ஜூன் 15 : எண்ணம்


நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!