x

ஜூன் 07 : “நான்” என்ற தத்துவமே நாம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


“நான்” என்ற தத்துவமே நாம் :

தண்ணீரே சமுத்திரம், ஆறு, ஏரி, குளம், குட்டை, மழை, மேகம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுவது போல,

நான் என்று சொல்லும் அறிவின் தத்துவமே – காந்த சக்தி அலை இயக்கமே – பல்வேறு உருவில், அதனதன் தன்மைக்கேற்ப இயக்கும், இயங்கும் சக்தியாகவும், உணரும் ஆற்றல் நிலையாகவும் இருக்கிறது.

ஆகையால் இந்த ‘நான் என்ற தத்துவம் தான் – சக்திதான் – நாம் என்ற பலராக, அநேக கோடி சீவன்களாக, மனிதர்களாக, அறிவியக்கங்களாக இருக்கிறது.

உருவ அளவில் மனதுக்கு எல்லைகட்டிக் கொண்டு பல நாடுகளிலும் சிதறி வாழ்ந்து, தேசம், இனம், ஜாதி, மதம் என்னும் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டு, அதனால் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டோம். ஆழ்ந்து ஆராய்ந்தபோது, அறிவின் தத்துவமாகிய ஆன்ம நிலையை அறிந்து விட்டோம். அந்நிலையில் அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்தோம். இந்த விரிந்த மனநிலையில் அனைவரும் வாழ வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

‘நான்’ என்ற தத்துவமே நாம் :

“நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்

நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்

ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி

ஒருவருக் கொருவர் இன, தேச, ஜாதி,

தான்-தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்

தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்தோம்.

ஆன்ம நிலையறிந்து ஆராய்ந்து கண்ட

ஆட்சிமுறை உலக சமாதானத் திட்டம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 08 : சினத்தைத் தவிர்ப்போம்


PREV      :  ஜூன் 06 : சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!