x

ஜூன் 03 : மெய்விளக்கம் (மெய்ஞானம் )

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


மெய்விளக்கம் பெற்ற எவராயினும்

அவர் மனக் கண்ணோட்டத்தில் :

1) மெய்ப் பொருளாகிய இருப்பு நிலை,

2) விண் என்ற சுழல் விரைவு ஆற்றலான உயிர் நிலை,

3) உயிர் எனும் விண் துகளிலிருந்து எழும் விரிவு அலை,

4) விண்ணிலிருந்து பரவும் விரிவு அலையானது சுற்றிலுமுள்ள இருப்பு நிலையோடு ஊடுருவி இணைந்து விடுவதால் ஏற்படும் வான்காந்தம்.

5) வான் காந்தமே உயிர் உடலுக்குள் எல்லகட்டித் தனிச் சுழலாக இயங்குங்கால் பெறும் சிறப்பான சீவகாந்தம்.

6) வான்காந்தமோ சீவகாந்தமோ பருப் பொருட்களில் இயக்க அலையால் திணிவு பெறும் போது அது சமனாகும் இயக்க விளைவுகள் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து தன்மாத்திரைகளாக மாற்றம் பெரும் இயல்பூக்கம்.

7) இருப்பு நிலையான மெய்ப்பொருளே அறிவாகி நுண்பொருளான விண்ணிலிருந்த பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி நிறைந்து அது அதன் வடிவத்திற்கேற்ப இயக்க ஒழுங்காகவும், புலனுணர்வாகவும், தன்னையே அறிந்து கொள்ளத்தக்க ஆறாம் நிலை அறிவாகவும் விளங்கும் அருட் பேராற்றலான அறிவு நிலை, இவையெல்லாம் அயரா விழிப்பு நிலையில் காட்சியாக விளங்கும். இந்த முழுமையான பேரியக்க மண்டல விளக்கமே மெய்ஞானம் என்று வழங்கப் பெறுகிறது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

“அறிவு பிறழாத மனிதனாகத் தான் வாழ வேண்டும் என்றால்,

அந்த விரிந்த மனப்பான்மைக்காக இயற்கை உணர்வு வேண்டும்..

இறையுணர்வு வேண்டும். அறநெறி வேண்டும்”.

“சிறப்பான இறைநிலை விளக்கத்தையும், செயல்விளைவு

தத்துவத்தையும் எவ்வளவு தெளிவாக மனிதன்

உணர்ந்திருக்கின்றானோ, அந்த அளவுக்கேற்ப

மனிதனுடைய சிறப்பும் வாழ்வும் அமையும்”.

“மேலும் மேலும் அறிவு உயர்ந்து, மனவளம் பெற்று,

உடல் நலம் பெற்று, வாழ்க்கையில் மேம்பட்டு

சிறப்பாக வாழ்வதற்கு மனவளக்கலைப் பயிற்சி உதவும்”.

“ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சிபெற்று

அணுவென்ற உயிராகி அணுக்கள்கூடி

மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கேற்ப

மூலகங்கள் பலவாகி அவையிணைந்து

பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்


பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி

நீதிநெறி உணர்மாந்தராகி, வாழும்

நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம்காண்போம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 04 : உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம்

PREV      :  ஜூன் 02 : வாழ்க்கை நலன்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!