x

ஏப்ரல் 22 : பற்றறிவு, கற்றறிவு,முற்றறிவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

பற்றறிவு, கற்றறிவு,முற்றறிவு :

தூலம், சூக்குமம், காரணம் என்ற மூன்று சொற்களைக் கேட்டிருப்பீர்கள். இவற்றுள் தூலமாகியது உடல், சூக்குமமாகியது உயிர், காரணம் என்பது பிரம்மம் அல்லது மெய்ப்பொருள். இந்த உடலுக்கு மையப்புள்ளி, சுற்று வட்டம் இரண்டும் உண்டு. அதாவது உடலுக்கு எல்லை உண்டு. உயிருக்கும் மையப்புள்ளி உண்டு; ஆனால் அதனுடைய சுற்றுவட்டம் ஒரு எல்லைக்குள் அடங்காது. மெய்ப் பொருளுக்கோ மையப்பள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. அந்த உயிருக்கு மனமானது விரியும் போது அது பிரம்மம் வரையில் போவதனால் சுற்றுவட்டம் இல்லை.

ஆனால், பிரம்ம நிலைக்கு மையப்புள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. இங்கு பிரம்மமே அறிவாக இருப்பதனால் அந்த பிரம்மம் என்ற நிலையிலே முற்றறிவு (Total Consciousness). அது உயிராக வந்ததனால் இயங்கிப் பெற்ற சுற்றறிவு (Character) இதுவரையில் இயங்கிப்பெற்ற பதிவுகள் அனைத்தையும் அடக்கமாகக் கொண்டது. அதற்கும் மேலே இந்த உடல் வரையில் நின்று புலன்கள் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அது பற்றறிவு.

இவ்வாறாகத் தானே பற்றறிவு, கற்றறிவு, முற்றறிவு என்று மூன்றாகச் சொல்லலாம். இந்த மூன்று நிலையிலும் எங்கேயும் இருப்பது அறிவு ஒன்றுதான்; இருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு, அதனுடைய தன்மைக்குத் தகுந்தவாறு வேறுபடுகின்றது. தெளிவினாலே, தவத்தினாலே, பல பிறவிகள் எடுத்த தொடர்பினாலே அவர்களுடைய Character இந்த மூன்று நிலையிலே எங்கே வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால், விகிதாச்சாரம் என்ன? அந்தந்த இடத்தில் ஏற்பட்ட பதிவு அழுத்தம், வலுவு எந்த விகிதாச்சாரத்தில் இருக்கிறதோ அந்த அளவு அதிகமாக இருக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“அறியாமை அழிவுக்குத் துணை போகும்.

ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்”.

(முற்றறிவு – பற்றறிவு – கற்றறிவு )

இணைந்துணர் இன்பம் :

“முற்றறிவு சுத்தவெளி மூல ஆற்றல்

முதற்பொருளாய் இருந்த சிவம் உயிர்களூடே

பற்றறிவாய்த் தேவை பழக்கம் சூழ்ந்த

பலநிலைகட் கேற்ப ஐந்து புலன்கள் மூலம்

கற்றறிவாய் விரைவு பருமன் தூரம்

காலம் என்ற கணக்குகளாய் எல்லைகட்டிச்

சிற்றறிவாய் இயங்கு திருவிளை யாட்டைத் தன்


சிந்தனையால் உணர் இன்பம் சிவயோகம் ஆம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 23 : த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்

PREV      :   ஏப்ரல் 21 : தவமும் அறமும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!