x

அக்டோபர் 06 : உன்னையே நீ அறிவாய்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர்,06….
உன்னையே நீ அறிவாய் :
இரும்பு ஒரு கரண்டியாக்கபட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இரும்பு என்றாலும் கரண்டி என்றாலும் அது ஒரு பொருளையே குறிக்கும். அதுபோல் தெய்வம் என்ற அருட்பேராற்றலே பேரியக்க மண்டலத்தில் இயங்கும் எல்லாமாக இருக்கிறது. நீயுமாக மனித வடிவமாக இருப்பதும் அதுவே. இந்தக் கருத்தில் மனத்தை பதித்துக் கொண்டு உண்மையை உணர்ந்து கொள். நீயென்றாலும் தெய்வமென்றாலும் ஒரு பொருளையே குறிக்கும்.
கரண்டியை உருக்கிவிட்டால் இரும்புக்குக் கொடுத்த வடிவம் மறைந்து விடுகிறது. அவ்விரும்புக்கு கரண்டி என்று கொடுத்த பெயர் மறைந்து விடுகிறது. என்ன மிச்சம் ? இரும்பு தான். இரும்பை பல வடிவங்களாக்கி பெயர்களை அக்கருவிக்குக் கொடுக்கிறோம். வடிவத்தையும் பெயரையும் கழித்துவிட்டால் மிஞ்சுவது இரும்புதானே !
அதேபோன்று நீ உன்னையறிந்து கொள்ள முயற்சி செய் ! மனிதனென்ற வடிவத்தையும், உன் செயல் பதிவுகளாக உள்ள வினைப் பதிவுகளையும் கழித்துப் பார் ! உன்னில் மிஞ்சுவது எல்லாம்வல்ல அருட்பேராற்றலாக விளங்கும் பரம்பொருளே.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு,
அறிவுக்குள் அருட்பேராற்றலின்
இயற்கை மெய்ப்பொருள்”.
“உணர்ந்தால் தெளிவு,
உணராவிட்டால் மயக்கம்”
“உயிருக்குள்ளாகத் தேய்வமே அறிவாக,
இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவது தான்
அகத்தவப்பயிற்சி ” (Simplified Kundalini Yoga) .
“இறைநிலை, பரமாணு, பரமாணுக்கள்
கூடியதோர் தொகுப்பாம் விண்கள்
நிறைவெளியில் விண் சுழல, வெளி அழுத்த, விளைவாக
விண்கரைய, அக்கரைசல் வெளியேற, அனைத்தலைகள் காந்தமாச்சு;
மறைபொருளாம் காந்தமென்ற நுண்துகளின் தன்மாற்றம்
அழுத்தம் முதல் ஐந்தாகும் முடிவு நிலை மனமாம்
குறைவில்லா இயற்கையதன் தன்மாற்றச் சீரதனை
மேற்சொன்ன வரிசைகளில் வைத்து மனப்பாடம் செய்வீ”ர்”.
” அவனில் அணு, அணுவில் அவன்
உன்னில் எல்லாம் உன்னை நீ அறி”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!