மார்ச் 10 : அறிவின் எல்லை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


அறிவின் எல்லை:

“நாம் என்னென்ன நினைக்கிறோமோ அந்த அளவு அறிவிலே விரிந்து இருக்கின்றோம். விரிந்து அறிந்த நிலை ஒன்று, அந்த நிலையை ஒட்டி குறிப்பிட்ட அளவுக்கு இயக்கம் (Localising action) ; ஒரு பொருள் மீது தனியாக அதைப் பயன்படுத்தும் போது அப்போது விரிந்த நிலையிலே அறிவாலே எவ்வளவு விளக்கம் பெற்று இருக்கின்றோமோ அந்த விளக்கம் அத்தனையும் சிறு சிறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும்போதோ, அதன் மீது மனம் செலுத்தும்போதோ, விரும்பும் போதோ அத்தகைய விரிந்த அறிவினுடைய தன்மை அத்தனையும், அந்தச் சிறு இயக்கத்திலும் பயன்படும்.

இப்பொழுது ஒரு மாநிலத்தை (Province) ஆளக்கூடிய ஒரு பெரிய அதிகாரி இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் சாதாரண ஒரு ஊருக்கான திட்டம் ஒன்றை அவர் உருவாக்கும் போதோ, அதைக் கண்காணிக்கும் போதோ, மாநிலம் முழுமையும் நிர்வகிக்கக் கூடிய நிலையிலே அந்த ஒரு சிறு விஷயம் கூட சிந்திக்க முடியும்.

அந்த இடத்திலே இருந்து சிந்திக்கக் கூடிய ஒரு எழுத்தர் (Clerk) அல்லது மற்றவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய மனம், அறிவு இருக்கும். அதுபோல நம்முடைய செயலுக்கும், தன்மைக்கும், இந்தப் பண்பாட்டுக்கும் தக்கவாறு, இந்த அறிவு எந்த எல்லையில் நிற்கிறது என்பதாக இருக்கிறது.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

பெரியார்:

“அறிவு, சுகம், பொருள், அரசியல், விஞ்ஞானம்

ஐந்து தத்துவங்கள் அறிந்தவன் பெரியோன்”.

“கதிரவன் காலத்தே காணாத விண்மீன் போல்

புதிர்போன்ற அறிவுநிலை புலன் இயங்குங்கால் தோன்றா”.

மனம் செம்மையுற அகநோக்குப் பயிற்சி

(Simplified Kundalini Yoga – SKY) :

“அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்

அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி

அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்

அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள

அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;

ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற

அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை

அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      :  மார்ச் 11 : உண்மையான துறவு யாது?

PREV      :  மார்ச் 09 : உணர்வு, உறவு

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!