நவம்பர் 21 : முன்பின் பிறவிகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..


முன்பின் பிறவிகள்

ஒரு மனிதனின் முற்பிறவிகளை அறிய வேண்டுமானால் அவன் உருவதிற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக்கொண்டே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.அந்தத் தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின், உடலியக்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும்.

பின்னோக்கிச் செல்லும் உருவப் பரிணாமத் தொடர்பு, பல ஜீவராசிகளையும் தாண்டிப்போய் இறுதியாகப் பரமாணுவிலேயே முடிவு பெறும். அங்கிருந்து முன்னோக்கிப் பார்த்தால், எல்லா ஜீவராசிகளும், தோற்றப்பொருட்களும், ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்குக் காட்சியாகும்.
ஒரு மனிதனின் பின்பிறவிகளை அறிய வேண்டுமானால், அவை அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும் அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாவர்.

ஆதி அகண்ட சக்தி, அணு, அறிவு என்ற மூன்று நிலைகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் தெளிவாக இருக்கும். மற்றவர்கள் பொறுமையோடு பலதடவை சிந்தித்தே அறிய வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..


Like it? Please Spread the word!