நவம்பர் 06 : கூர்மையும், நேர்மையும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


கூர்மையும், நேர்மையும் :

இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் மனித இனத்தினுடைய பரிணாமம், தோற்றம், வளர்ச்சி, இயக்கம் எல்லாமே இயற்கையின் உச்சக்கட்ட சிறப்பு ஆகும். மனித இனமானது இயற்கையின் உச்சக்கட்டச் சிறப்பு ஆகும். மனிதனின் மனமானது இயற்கையின் சிறப்புமிக்க பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்திருக்கிற களஞ்சியம் ஆகும். பன்னெடுங்காலமாக இயற்கையின் ஒவ்வொரு அதிசயமும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கி இருப்பாக வைக்கப்படிருக்கிறது. வான் காந்தத்தையும் சீவகாந்தத்தையும் விளங்கிக் கொள்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கையின் எல்லா உண்மைகளையும், பிரபஞ்சத்தின் எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆறாவது அறிவில் கூர்மை, நேர்மை என்னும் இருவகை உயர் திறன்கள் அடங்கியுள்ளன. கூர்மை விஞ்ஞானமாகவும், நேர்மை தத்துவ ஞானமாகவும் திகழும். காந்த ஞானம் அறிவின் இரு திறன்களையும் வளர்க்கும். மனிதனுடைய மனதின் அடித்தளமாக உள்ள ஆன்மீக அறிவு வளத்தை நிறைவாகப் பெற முடியும்.

இந்த வகையில் ஒருவர், தான் உள்ளுணர்வாகப் பெறவேண்டிய பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி, காந்தம் இவற்றை உணர்ந்தால் அவரிடம் எப்பொழுதும் விஞ்ஞான அறிவு ஓங்குவதோடு தெய்வீக குணங்களாகிய அன்பும், கருணையும் மலர்ந்து அவருடைய வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

அனைத்து இயக்கங்களும் காந்த ஆற்றலே :

“வான் காந்தம் சீவகாந்தம் வளம் ஆற்றல் மறந்திடில்

வழிவேறு இல்லை தெய்வம் அறிவு இவை உணர்ந்திட;

ஏன் என்றால் மெய்ப் பொருளோ எங்கும் நிறைபெருவெளி

இதனோடு விண் சுழலின் அலையிணைந்து உறைந்திட

ஆன்மாவாய் ஆளும் சீவ காந்தமாகும் உடலினில்.

ஐயமில்லை விண் உயிராம் இயல்பு சுழலலையதாம்,

மேன்மையோடு உயிர் மையத் தமைந்தவெளி அறிவது

மிக வியக்கத் தக்க அதன் படர்க்கை நிலை மனமதே”.

இறைநிலை :

“தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்

திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்.

தெய்வநிலை தெரிந்து கொண்டேன் திருவருளே நானாகத்

திகழும் அனுபவம் எனக்கு இல்லை யென்பர் சில்லோர்;

தெய்வமெனும் பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்


தேடுகிறார் பாலை அதைக் காணேன் என்றால் மயக்கே;

தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே

திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  நவம்பர் 07 : திறமை உயர்வு

PREV      :   நவம்பர் 05 : இறைநிலையுணர்ந்த அறிவு

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!