டிசம்பர் 11 : மறைபொருட்களை உணரும் நிலை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மறைபொருட்களை உணரும் நிலை:

பிரம்மஞானம் உலகில் மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடைபட்டதற்கு முக்கிய காரணம் உண்டு. அதை உணர்ந்து கொண்டு, தக்க முறையில் அந்தத் தடைகளைக் களைய வேண்டும்.

தடைக்குக் காரணங்களாவன:

அனைத்தியக்க அருட் பேராற்றலான இறைநிலை – பிரம்மம்,

அதிலிருந்து தோன்றிய விண்,

விண்சுழலிருந்து தோன்றிய காந்தம்,

காந்தத் தன்மாற்றங்களாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் – இவற்றின் கடைசி

அலை இயக்கமாகிய மனம்.

இவையனைத்தும் மறைபொருட்கள். இவை இல்லையென்று மறுத்துக் கூற முடியாது. ஆயினும், இவற்றை அறிவதற்காகவே ஆறாவது அறிவு எனும் சிந்தனையாற்றல் மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஐந்து புலன்கள் மூலம் தோற்றப் பொருட்களை உணர்வது ஐயறிவு.

புலன்கள் மூலம் உணரப் பெறும் பொருட்களுக்கு மூலமான மனம், காந்தம், விண், மெய்பொருள் இவற்றை உணரக்கூடிய அறிவுதான் ஆறாவது அறிவு. புலன்களால் பொருட்களை உணரும்போது மன அலைச்சுழல் விரைவு நிலையில் மறைபொருட்கள் விளங்கா. மன அலைச்சுழல் விரைவை அகத்தவச் சாதனையால் குறைத்து, அந்த நுண்ணிய நிலையில் தான் மறைபொருட்களை உணர முடியும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..


Like it? Please Spread the word!