ஜூலை 14 : உலகமே ஒரு கலா சாலை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


உலகமே ஒரு கலா சாலை :

“உலகமே ஒரு பழைய பள்ளிக்கூடம்
ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில்
பல புதிய பாடம் சூழ் நிலைகட் கேற்ப
பலாத் காரமாகப் போதிக்கும், என்றும்
நலம் விரும்பும் அறிஞர் பலர் செய்யும் போதம்
நல வாழ்வில் அவர்கள் சந்தித் தாராய்ந்த
சில முக்கய நிகழ்ச்சிகளின் விளக்கமாகும்
சிந்தனையை செயல் திறனை ஒழுங்கு செய்யும். “

“இந்த உலகம் ஒரு பழைமையானதும், பெரியதுமான கலா சாலையாகும். சூழ்நிலைகளுக்கேற்றபடி உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் புதிய புதிய பாடங்கள் பலாத்காரமாக போதிக்கப் படுகின்றன. இந்தப் படிப்பை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. சமூக நலமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் அறிஞர்கள் அவ்வப்போது பலவிதத்தில் மக்களுக்கு நற்பயன் விளைவிக்கும் சன்மார்க்கங்களையும், வாழ்க்கை அனுபவ நுட்பங்களையும் போதனை செய்து வருகிறார்கள். அவர்கள் வாழ்வில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து, இன்ப துன்ப விளைவறிந்து வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறார்கள். இந்தப் போதனைகள் அனைத்தும் மக்களின் சிந்தனையை உயர்த்தி செயல் திறமையை ஊட்டி வாழ்வை ஒழுங்குபடுத்தி வளப்படுத்துவனவாம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

இயற்கையின் பேராற்றல் :

“இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்

எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்

பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;

பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?”

“அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி,

அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது

அறிஞர் கண்ட தெளிவு”.

“செயல் வேகம் கொண்டவனே

சித்தன்; சிந்தனையில்

புயல் வேகம் கொண்டெழுத்தில்

பொறித்தான் பலகலைகள்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      : ஜூலை 15 : எல்லாம் நன்மையே !

PREV      : ஜூலை 13 : அறிவு நிலையில் வேறுபாடுகள்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!