செப்டம்பர் 15 : நிறைசெல்வம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


நிறைசெல்வம் :
.

“சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றால் என்ன ஆகும் என்றால் நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் இருக்கிறார்களோ நமக்குத் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருவி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள மடியும். எத்தனை பேருடைய நட்பு நல்ல முறையிலே ஏற்பட்டுக் கொண்டிருக்குமோ அந்த அளவுக்கு மனதிலே நிறைவு உண்டாகும். அதேபோல் வெறுப்புணர்ச்சி கொள்கிறோம் என்றால் ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் ஒருவரைத் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கும். அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவராக நமக்கு தெரிந்தவர்களோ நெருங்கியவர்களோ ஒதுங்கிக் கொண்டே இருப்பார்களானால் முகமலர்ச்சி ஏற்படவே ஏற்படாது.
.


ஆகையினால் எப்பொழுதுமே நட்பை விருத்தி செய்து கொள்வதற்கு நம்முடைய செயலில் இவருக்கு என்ன நன்மை செய்ய முடியும் நமது ஆற்றலைக் கொண்டு இன்முகம் காட்டி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்து கொண்டே வரும் பொழுது, அதற்காக உங்களுடைய நன்மையை அல்லது இருப்பை அழித்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு செய்தாலே போதும் நாம் ஒருவருக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் அதுவே நல்லபடியாக அமையும். அந்த முறையில் எதிர்பார்ப்பதைத் தவிர்க்கலாம். இரண்டாவதாக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத் தேர்ந்தெடுத்து அப்படிச் செய்வதற்கு வேண்டிய ஆற்றலை என்னென்ன முறையில் வகுத்து வளர்த்துக் கொள்ள முடியுமோ அதை வளர்த்துக் கொள்ளும் போது நிறை செல்வம் இருக்கிற மாதிரி நமது மனநிலை வளர்ந்து கொண்டேயிருக்கும்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *
.

ஆராய்ந்து நட்புகொள் :

“நட்புக்கோர் நோக்க முண்டு நாடுபவர் தரம் ஒக்கும்
கட்புலனுக் கெட்டாது கருத்தை ஊன்றிக் காண்பீர்
உட் பகையைச் சுயநலத்தை உள்வைத்தும் நடிப்பார்கள்
நுட்பமுடன் ஆராய்ந்து நோதல் தவிர்த்தே வாழ்வோம்”.
.

“நம்மை நோகடிப்பவர்களை நாம் நேசிக்கலாம்;
நம்மை நேசிப்பவர்களை நாம் ஒரு போதும் நோகடிக்கக்கூடாது.”
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!