ஆகஸ்ட் 05 : தியானத்தின் நன்மைகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


தியானத்தின் நன்மைகள் :

விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். உடளவில் ஏற்படும் நன்மைகள் :

1) தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்பு குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2) (Blood pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3) எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4) உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்து பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5) உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6) ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:

1) மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.

2) மூலையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

3) “As a man thinks, so he becomes it, A man is what he thinks all day long” என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்த வெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.


4) விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதனால் அவர்கள் “பீட்டா” wave-ல் இருக்க முடியாது. “ஆல்பா” wave -க்கு பக்கத்தில் வருகிறார்கள். “விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்”. ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

அகத்தவப் பெருமை :

“அகத்தவத்தின் பொருள் கண்டு அதன் பெருமை யுணர்ந்திடுவீர்;

அகத்தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி;

அகத்தவத்தால் மேலும் உயிர் அம்மாகி மெய்ப்பொருளாம்;

அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம்.

அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்;

அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்;

அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பைப் பெற்றிடலாம்.

அகத்தவம் தீவினையகற்றும் அருள் நெறியை இயல்பாக்கும்;

அகத்தவமே இறை வழிபாடு அனைத்திலும் ஓர் சிறந்த முறை;

அகத்தவமே உயிர்வழிபாடு அதனை விளக்கும் ஒளியாம்;

அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!